யார் அவள்....... யார் அவள்......- என் இதயத்தை ஏற்றவள் யார் அவள். வார்த்தைகள் இருந்தும் பேசவில்லை. வாழ்க்கையின் பாதைக்குப் போகின்றேன். கனவில் காட்டும் உன் முகத்தை.. சுவரில் வரைந்து பார்க்கின்றேன். சுகமா என்று கேட்கின்றேன்....?
இளமைக் குரலை அறிந்துவிட்டேன். இன்பக் கடலில் மூழ்கிவிட்டேன். உன்னைக் கண்டா - குயிலும் கூவப் பழகியது...! உன்னைக் கண்டா - கிளியும் பேசப் பழகியது...! இளமை இனிமை இரண்டும் என்னைத் தனிமை ஆக்கியது. ஸ ரி க ம.......... யாரவள் ப த நி ஸ்.......... யாரவள்....!!!
அழகைப் பார்த்து மயங்கிவிட்டேன். உன்னை எண்ணி அன்னையை அணைத்துவிட்டேன். உன்னைக் கண்டா - மயிலும் ஆடப் பழகியது. உன்னைக் கண்டா - அன்னம் நடை பழகியது. அழகும் அறிவும் இணைந்து என்னை அமைதி ஆக்கியது. ஸ ரி க ம.......... யாரவள் ப த நி ஸ்.......... யாரவள்....!!
தேவதையை நேரடிப் பார்வையில் பார்த்து விட்டேன். - அவள் காலடியில் தரிசனம் ஆகிவிட்டேன். உன்னைக் கண்டா - கோயில்ச்சிலைகள் செதுக்கப் பழகியது. உன்னைக் கண்டா - புடவைகள் நெய்யப் பழகியது. - நீ....... தேவதையா......? தெய்வச்சிலையா......? என்னைச் சிந்தனையில் மூழ்கவைத்தது. ஸ ரி க ம.......... யாரவள் ப த நி ஸ்.......... யாரவள்....!!!