ஓர் நாள் எங்கேயோ அழைத்து செல்கிறாய் நீண்ட தூரம் நடக்கமுடியவில்லை என்றேன்
என் கைப்பிடித்துக்கொள் என்றாய் பிடித்து நடந்தேன் உற்சாகத்தோடு…… அழகான கவிதையாய் !
மற்றொரு நாள் ரம்யமான மாலை வேளை மொட்டை மாடியில் நீயும் நானும்.
வருடிச்செல்லும் தென்றல் என் கூந்தலினை கலைக்க…. முகத்தில் விழுந்த முடியை அழகாக விலக்கினாய் உன் விரல்களால்…… ரசனையான கவிதையாய் !
அன்றொரு நாள் எதையோ எதிர்பார்த்து என் விரல்கள் உனது விரல்களை பிடித்தது மிக அழுத்தமாக உடனே என்னை வசீகரிக்கும் சிறிய புன்னகையுடன் ஆழமான ஒர் பார்வை பார்த்தாய் - அழகான அந்த இரவு வெளிச்சத்தில்……. அர்த்தமுள்ள கவிதையாய் !
இன்னொரு நாள் இப்படி ஒன்று கிடைக்காதா என்று ஏங்கவைக்கும் இதில் யார் கொடுப்பது யார் பெற்றுக்கொள்வது தெரியவில்லை இருந்தாலும் தொடர்கிறது
நீண்ட நேரம் இதழ்களின் வழியே உள்ளே நுழைந்து உயிர் எங்கே என்று தேடி செல்லும் உ(எ)ன் முத்தம்…….. உயிருள்ள கவிதையாய் !
கவிதைக்கு பொய் அழகாம் என் கவிதையும் கூட – ஆனால் பொய்யான நிஜம் என் கனவுகளே இன்று கவிதையாய் !