நியுடன் சொல்லித்தராத ஒரு ஈர்ப்பு விதியினை உன் காதல் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டேன்!!
ஆசானே கரும்பலகையில் கணக்கு பாடம் கற்றுத் தந்தார்-
நீயே அன்றாடம் உன் விழிகளால் கணிதப் பாடம் கற்றுத் தந்தாய் எனதான என் இதயப்பலகையில்!!!
நீ சங்க காலத்து இலக்கியமுமில்ல-ஆனாலும் உன்னை மணனம் செய்தேன்
நீ உலகறிந்த மும்தாஜும் அல்ல ஆனாலும் கூட உன் பெயரையே அடிக்கடி ஒப்புவித்தேன்
மொத்ததில் நீ தமிழ் இலக்கியம் என்பதால்.........
கண் விழித்துப் படித்தாலும் சில நேரங்களில் மின்சாரம் கழுத்தறுப்பது போல
பரீட்சை எழுத வைத்தாய் பெயில் ஆகுவேன் என்று தெரிந்து கொண்டே................
வெண் கட்டியை விடவும் வெண்மை என்று நினைத்தேன் உந்தன் பெண்மையை
ஆனால் இன்றைய அரசியல் போல் நெஞ்சில் உரசிய நீ காதல் வாக்குறுதி தந்துவிட்டு................
ஏனடி ? பெண்ணே வாக்கு மாறினாய்?
பொத்துவில் றாபி |