மீட்கும் போராட்டம் இன்னும் மீளவில்லை உன்னை இழந்த கண்கள் உன்னை தேடியே போகுது......
வாழ்க்கை எங்கும் போராட்டம் பயணங்கள் எங்கே முடிவாகும் நாடோடி போல் என் மனம் மௌனமாய் உருமாரும்......
நிழலாடும் நெஞ்சம் புதிர் போடும் எண்ணம் விதி என்ற நூலின் பிம்பம் ஆனதே...!!
உன் விரல் தொட்ட நிமிடம் எங்கே...? உன் தோல் சாய்ந்த தருணம் எங்கே...? கண்ணீரின் வழியில் என் இதயம் உருகுது மீண்டு வாழ உயிரும் ஏங்குது உன்னை சேர, பிரிவும் பாதை மறக்குமோ...?
ரணங்களின் தடங்கல் இல்லை , தவிப்போடு இதயம் சொல்லும் ஊமை வார்த்தைகளின் தொல்லை.... உறக்கம் இல்லா இரவுகளில் உன் நினைவுகள் மட்டும் தொலைதூரம் போய்விட்டாயோ இல்லை மீட்கும் தொலைவில் நான் இல்லையோ...?