"உன்னோடு காதல் கொண்டு.. உள்ளம் வாடுதடி. உள்ளே ஓர் ஊமை நெஞ்சு.. உயிரை தேடுதடி.. உன் கைகள் நான் பற்ற.. யோகம் இல்லையடி.. ஆனாலும் என் காதல்.. பொய்யாகி போகாதடி. நெருங்கி நொறுங்கும் நெஞ்சில்.. நேசம் நில்லாதடி.. ஊடல் இல்லா காதல்.. உண்மை ஆகாதடி.. உயிரினுள்ளே உறங்கும் உருவம்.. உந்தன் உருவம்தானடி.."
"விதியின் பாதை வழியென்று.. மதியை இழக்காதே.. உண்மை காதல் கண்டும்.. உன் கண்ணைமூடாதே... மனிதன் கண்ட மூடத்தை.. மனதில் கொள்ளாதே.. மறந்தும் அன்பை மறுத்து. பழியை கொள்ளாதே..."
"படைப்பின் பயனை முன்னே அறிந்தால்.! பாசம் இங்கே முளைத்தா இருக்கும்..?"
"நீயும் கல்லான சோகம்.."
|