நிலவை நான் பார்க்கும் போது உன்னை நான் பார்க்கின்றேன் ஏன் தெரியுமா? நீ அந்த நிலவை விட அழகாக இருக்கின்றாய்.
உயரப்பறக்கும் பிராந்தை நான் பார்க்கின்றேன் ஏன் தெரியுமா?........... நீ அந்த உயரப்பறக்கின்ற பிராந்தை விட என் உள்ளத்தில் உயர்ந்து நிக்கின்றாய்.
ஓடுகின்ற நதியை நான் பார்க்கின்றேன் ஏன் தெரியுமா? அந்த ஓடுகின்ற நதியை விட என் நினைவுகளில் நீ வேகமாக ஓடுகின்றாய்.
அடிக்கின்ற சமுத்திரத்தின் அலைகளை நான் பார்க்கின்றேன் அது அயரவில்லை ஓயவில்லை உறங்கவில்லை நிற்கவில்லை ஏன் தெரியுமா?
அது உன் இதயத்தின் துடிப்பாக உன் விழியிரண்டும் அடிக்கின்ற அழகை நான் அதில் கண்டு ரசிக்கின்றேன்.
அதிகாலை வேளையிலே நான் பூஞ்சோலை நடுவே உலாவந்தேன் அந்த ஒவ்வொரு பூக்களின் இதழ்களிலும் பனித்துளிகள் மெருகூட்டி பசுமையான இதமான உணர்வுகளை என் இதயத்தில் பதியவைத்தன.
நான் என் சிந்தனையின் சிறகை விரித்தேன் அப்போது உன் நினைவுகள்கூட என் இதயத்தின் உணர்வுகளை பசுமையான பனித்துளியாய் வருடுகின்றன. ஏன் தெரியுமா?
உன் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும்கூட அந்த இதழ்மேல் வருடுகின்ற பனித்துளியாய் தூய்மையான எண்ணங்களாய் மிளிர்கின்றன.
நீ உயர்ந்ததைவிட உயர்ந்து நிற்கின்றாய் அதனால் நீ என் உள்ளத்தில் உயர்ந்து விட்டாய் அது உன் இதயத்தின் உள் அழகை காட்டின. இது என் ஆத்மாவின் எண்ணத்தை ஈட்டின.