உன்னை நேசித்தபோதுதான் உலகம் அழகாக தெரிந்தது. உன்னை சுவாசித்தபோதுதான் வாழ்வின் அர்த்தம் புரிந்தது.
ஒவ்வொரு கணமும் உனைப் பற்றி நினைத்தால் இதுதான் காதல் என்பதா?
என் உயிர் நீயடா உள்ளம் சொல்லுது இதுதான் காதல் என்பதா?
சொந்தங்கள் இருந்தும் தனிமையில் தவிக்கிறேன் இதுதான் காதல் என்பதா?
மனதினில் உன்னுடன் சேர்ந்திட வாழ்கிறேன் இதுதான் காதல் என்பதா?
நட்பு என்னும் மழையில் என்னை நனைய வைத்த நண்பனே நானறிந்த தமிழில் உன்னை கவிவரைந்தேன் கொஞ்சமே கற்புடைய அன்பில் என்னை கரையவைத்த அன்பே உனை கவிவரைய பழையபடி வரவேண்டும் கம்பனே
ஊரறிந்த நாள்முதலாய் உறவுகொண்ட தோழனே நான் வேரறுந்து நின்ற வேளை விழுதான வீரனே அன்பு மொழி போசுவதில் நீ எனக்கு அண்ணனே
அழித்திடா பாச வெள்ளம் அள்ளிதந்த வள்ளலே துன்பமான வாழ்க்கையை திருடிவிட்ட கள்வனே உன் தூய்மையான தோழமை சொல்ல என் கவி ஏழையே
உயிர் கொடுப்பான் தோழா என்றுரைப்பதெல்லாம் பழமையே என்னிடத்தில் இருப்பது உந்தன் உயிர்தானே அதை கொடுத்துவிட்டு ஒருகணமெனும் உயிர் வாழ்வேனா சொல்லடா.......