Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
Love poems [69]
Friendship poems [4]
Relationship poems [4]
General poems [5]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 2
Guests: 2
Users: 0
Main » Articles » poems » Relationship poems [ Add new entry ]

அடுத்த பிறவியில்
நம்பிக்கை இல்லை
அடுத்த பிறவியில்
உனக்கு.
ஆனால்
நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க.

மனதில் மட்டுமல்ல
உன்னையே முழுதும்
என்னுள் சுமக்க
உன் தாயாக !

காலை விடியலின்
முதல் உருவம் நானென்றாய்
முதல் உறவாகவே…..
உன் தாயாக !

உன் விழியில் நானென்றாய்
கண்ணுக்குள் வைத்துன்னை
பாதுகாப்பேன்…..
உன் தாயாக !

கவிதைகளின் தொடக்கம் நானென்றாய்
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக !

மடி சேர விரும்பினாய்
என் மடியிலே சேர்த்துன்னை
தாலாட்டு பாடுவேன்
உன் தாயாக !

உடனிருந்தால் அனைத்தையும்
வெல்வேன் என்றாய்
கற்றுக்கொடுத்து எல்லாவற்றிலும்
வெற்றி காணவைப்பேன்
உன் தாயாக !

உலகை
பரிசளிப்பேன் என்றாய்
இந்த உலகையே உனக்கு
அறிமுகப்படுத்துவேன்
உன் தாயாக !

என்னை போலொரு
பெண்குழந்தை
வேண்டுமென ஆசை உனக்கு.
உன்னையே
என் சாயலில்
பெற்றெடுப்பேன்
உன் தாயாக !

நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !

Category: Relationship poems | Added by: Abinaya (2009-08-04)
Views: 881 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2025
Hosted by uCoz