சொந்தங்கள் சேர்ந்து... சோலை வனமாய் மாறும் நேரமிது. பந்தங்கள் சேர்ந்து... பாவை உன்னை பார்க்கும் நேரமிது. சோகங்கள் மறைந்து... சொர்ப்பனத்தில் மிதக்கும் நேரமிது. தாளங்கள் சேர்ந்து... தந்தனத் தோம் பாடும் நேரமிது.
காலை விடிந்தால் கலியாணம். மாலை மலர்ந்தால் சுபபோகம். நெற்றியின் மத்தியில் திலகமிட்ட பெண்ணே. நேர்மைக்கு இது தான் அறிகுறி பெண்ணே. மார்புக்கு மத்தியில் மஞ்சள் கயிறு கண்ணே மானத்தோடு வாழ அறிகுறி கண்ணே. மெட்டி கண்டு களிக்கும் பெண்னே. துன்பம் வந்தால் பொறுக்க வேண்டும் பெண்ணே. கை விரல்கள் கோர்த்து நடக்கும் கண்ணே. கலங்கம் வராமல் காக்க வேண்டும் கண்ணே.
கணவன் மனைவி உள்ளம் காதல் பேசும் இல்லம். கட்டி அணைத்த முத்தம் கடைசி வரை சொந்தம். கணவன் மனைவி உறவு. கட்டிலுக்குச் சொந்தம். கணவன் பிள்ளை உறவு. தொட்டிலுக்குச் சொந்தம். எங்கள் உறவு முறைகள். எல்லை இல்லா கரைகள்.
பட்டுச் சேலை உருவில்... பார்த்து விட்டோம் அம்மன். பட்டு வேட்டி உருவில்... பார்த்து விட்டோம் பெருமாள். பலரும் வந்து கூடி... ஆசி பெற வேண்டும். தங்கத்தட்டில் உன்னை வைத்து... தாலாட்ட வேண்டும். தங்க நிலவே உன் உறவை... தனியாய் பாராட்ட வேண்டும்