நீரின் நிழலில் நிஜமான கம்பமோ-இல்லை நிமிடங்களில் நொருங்கும் நிலையற்ற விம்பமோ நீந்தித் தேடினேன் நேற்றைய நிஜக்குவியல்-இல்லை நீண்ட நாளின் பின்னர் நெடுநேர நிலாக்குளியல்
அணிலொன்று கேட்டது"அண்ணா குளிக்குறீயோ?" அண்ணார்ந்து பார்த்தேன் அணிலோடு அமைதியையும் அழகு நிலவு அருகில் இருந்ததில்லை அசையாத அமைதிக்கும் நான் ஆபத்தான எல்லை
கரைதேடும் கவலை கலங்கரைக்கு இல்லை கண்கொண்ட மட்டும் கடல் முழுதும் எல்லை கானகத்து கவரி கணப்பொழுதில் உதறும் காத்திருந்து காத்திருந்து கண்ணீர் தான் உதிரும்
தொலைதூரம் பறந்தாலும் தொலையவில்லை நான் தோல்விகள் தொடர்ந்தாலும் துவளாத மான் தொடுவானை தொடத்துனிந்தேன் புரிய வில்லை தான் தொட்டுவிட்டு திரும்பிப்பார்த்தேன் யாருமில்லை ஏன்?