நிம்மதி தேடி வந்த அந்நிய தேசத்தில் என் பிழைப்பு;
என் மதி நிறைந்ததோ சொந்த மண்ணின் நினைப்பு.
மன அமைதி இழந்து நாளும் வாழ்கிறேன் வாழ்க்கை;
தாய்மண்ணின் வாசத்தை நுகரத்துடிக்கும் நெஞ்சு.
சோர்வுற்ற வேளை தந்தையின் ஆதரவும்
நோயுற்றவேளை சாய்ந்திட அன்னை மடி
பிரிந்து வாழ்வோம் என மறந்து சண்டையிட்ட
சகோதரங்களின் இனிய பாசம் இவை இழந்தேன்.
ஓலைப்பாய் நித்திரை தந்த சுகம் நினைந்து - இங்கே
பஞ்சு மெத்தையில் கூட நிம்மதியில்லா உறக்கம்.
ஓய்வுக்காய் மேலைநாட்டு மக்கள் செல்லும் தேசம்
அது எம் தாயகம் போல் மன அமைதி தரும் இடமே.
அந்நிய மண்ணில், அந்நியனாய் வாழும் நானும் -ஏங்குகிறேன்
அவ் அந்நியன் போல்; என் தாய்மண்ணில் வாழ்ந்திடவே...
நான் படித்தது. மற்றவர்களும் படிப்பதற்காக...........
|