Site menu |
|
|
Section categories |
|
|
Tag Board |
|
|
Statistics |
Total online: 2 Guests: 2 Users: 0 |
|
|
| | |
|
காதலணை இட்டுவிடு
வெள்ளைத் தாளாக வெறுமையாய் இருந்த என் உள்ளப் புத்தகத்தில் உன் முதல்பார்வைமூலம் முன்னுரை கொடுத்தவளே! இனி என்னுரை நானெழுத உன் புன்னகை வேண்டாமா?
ஆவலுடன் நான் எழுதும் காதல் புத்தகத்தில் உன்னழகே பொதிந்த உட்பொருளாகிக்கொண்டதனால் அப் பொருளடக்கத்தில் பெண்ணே என் உயிரடக்கம்.
முன்னுரையும் கொடுத்தாய், புன்னகையும் கொடுத்துவிட்டாய், போதாதென்று இன்னும் வருவேன். நிறைவினிலே முடிவுரை எழுத…… தடைகள் பல தாண்டியேனும் நான் வருவேன்.
ஆம் என்ற ஒற்றை வார்த்தை வாய்மொழியில் இல்லாவிடினும் உன் விழிமொழியிலேனும் கொடுத்துவிடு.
ஏனெனில் உன் நீள்நுதலில் ஒளிர்திலகம் எந்தனுக்கோர் புலர்பகலோன். புதிர்போடும் விழிகளிலே சதிராடும் பார்வைகளே புசித்துவிடப் பகலுணவு.
மாலைக் கறுக்கலிலே உன் நினைவுப் பெருக்கல்களால் கிறுக்குகின்ற கவிதைகள் என் “டீ டைம்”.
இதமான இரவுகளில் வருடிச் செல்லுமுன் நினைவுகள் என் இதயராகம், கனவுகளே நிலாத் தூக்கம்.
இவ்வாறு என் ஒவ்வொரு நாளும் உன் நினைவுகளில் உதயமாகி கனவுகளில் அஸ்தமிக்கிறது.
ஆதலால் “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ”
என்றுரைத்த பாரதியை நன்றுணர்ந்த புதுமைப் பெண்ணே…… ஒன்றுரைத்து என் மனதை வென்றிடத்தான் வேண்டாமோ?
கன்றினைத் தாய் பிரிந்திடுமோ? மென்றிடப்பால் நீர் விஞ்சிடுமோ? ஒன்றித்தவோரிதயம் அருகிச் செல்ல மற்றிதயம் கருகிடுமோ? அன்றி மாற்றிதயம் பொருந்திடுமோ?
ஊற்றெடுத்த காதலது காட்டாற்றாய் மாறி கரையைக் கடக்கமுன்பே காதலியே காதலணை இட்டுவிடு. உன் இதயமதில் இக்காதலனை நட்டுவிடு. |
Category: Love poems | Added by: Abinaya (2009-08-04)
|
Views: 624 | Comments: 2
| Rating: 0.0/0 |
Total comments: 2 | |
0 2
ravi (2011-03-30 6:47 PM)
[ Entry]
nce
|
|
Our poll |
|
|
Comments |
|
|
|
|
Copyright lovecity © 2025 Hosted by uCoz |
|