Login

Registration
Main
 
Love City 
Site menu
Section categories
Love poems [69]
Friendship poems [4]
Relationship poems [4]
General poems [5]
Tag Board
Lovecity.do.am
LOVE CITY
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Main » Articles » poems » Love poems [ Add new entry ]

உன்னிடம் தொலைத்த என் இதயத்தை தேடி.
கடற்கரையோர சந்திப்பில்
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை தேடி
போகிறது என் வாழ்கை
பயணம்!!

உன் குறுநகையில்
விழுந்தேன்
குறைவாகவே நீ பேசினாலும்
குறையாத நேசிப்பை
வளர்த்தேன் உன்மீது
கள்ளமில்லா உன் உள்ளதை
நான் புரிந்ததும்
கள்ளமிட நினைத்தேன்
காதலின் துணைகொண்டு..!

இதயம் தொலைத்த எனக்கு
இரவு பகல் கூட தெரிவில்லை
உன் முகமே முன் தெரிகிறது..
சுவாசம் கூட மறந்த போதிலும்
உன் வாசம் உணர்கிறேன்
எப்போதும்..
தென்றல் தீண்டும் வேலையுளும்
அனலாக சுடுகிறது
நீ இல்லாத தனிமையில்..!

உன் நிழல் தேடும்
காய்ந்த சருகு இலை நான்..!
உன் சுவாசம் தேடும் பூக்கள்
தான் என் இதயம்
சூடாமல் சென்று விடாதே
என்னை.!

ஈர நிலத்தில் பதிந்த
கால் தடம் காலத்தின்
மாற்றத்தால்..அழியாத சுவடுயாய்
இருப்பது போல...
உன் நினைவுகள் என்னுள்
பதிந்துவிட்டன...!

உன்னை பார்த்து
விடைபெறும் முன்னே
பரிதவிக்கும் எனது மனதை
நீ அறிவாயா??
ஒவ்வொரு நாளும்
வாசலில் வந்து நின்றுவிட்டு
உனது விழியை பார்த்து கெஞ்சும்
எனது மௌனங்களின் வலியை
நீ அறிவாயா??

உன்னருகில் நான் இருந்தும்
உரிமை இல்லை..
உன் மடி மீது தலைசாய்க்க..
தடுக்கும் தூரத்தில் நான் இருந்து
பிரிக்கும் நேரத்தை கடிகாரம்
செய்துவிடுகின்றன.!

கண்களை இறுக்கி
கனவுகளில் செதுக்கிய
அழகிய சிற்பமடி
எனது நேசம்..
இரவு பகல் என்று பாராமல்
வருடங்களில் வடிவமைத்தேன்
உடையபோகுது
என்று தெரியாமல்!

என் எதிரே நீ இருந்தும்
என்னவள் நீ தான் என்று
என்னால் சொல்லமுடியவில்லை...
உன்னிடம் பேசமுடிந்தும்
என் நேசிப்பு நீ தான் என்று
உரிமையிட முடியவில்லை..
காற்றை குடித்தே வாழ்ந்தவன்
இன்று
நேசம் தின்றே வேகுகிறேன்...
என்னவென்று நான் சொல்ல
எதைக்கொண்டு
என் மனசை கொல்ல?

நாம் நடந்து சென்ற பாதையில்
இன்று நான் தேடி செல்கிறேன்
நீ இல்லாத தருணத்தில்!
விழிகள் நிறைய கண்ணீரை
ஏந்திக்கொண்டு
உன் இதயம் நனைக்க
வரும்போதெல்லாம்
என் கண்ணை விட்டு
பிரிந்துவிடுகிறது..
கண்ணீர்க்கு கூட
உன்னைய
தெரிந்துவிட்டது போல!!

ரோஜாவின் செடியில்
பூக்கள் உதிர்ந்த
பின்பும் முட்களை
தாங்கி நிற்கும்
அது போல
உன்னை நான்
இழந்த பின்பும்
முட்களை போல
உன் நினைவுகளை
தாங்கி செல்லும்
என் வாழ்க்கை!

உள்ளம் ஒன்றை செய்து
உயிர் ஒன்றை கொடுத்து
உன்னருகே நிறுத்தினேன் அன்பு
என்னும் உருவம் கொண்டு.!
சந்தோசமாக இருந்தால்
நாடுகிறாய் பேச..!
சோகம் என்று வந்துவிட்டால்
ஓடுகிறாய் என்னை விட்டு!
காலம் என்னும் நாட்காட்டியில்
சோதனை என்னும் முட்க்கள்
சாதனையில் முன் நிற்கிறது
என் வாழ்க்கையில்..
Category: Love poems | Added by: Abinaya (2009-08-06)
Views: 730 | Comments: 2 | Rating: 0.0/0
Total comments: 2
0  
2 illan   (2010-08-13 5:21 PM) [Entry]
biggrin

0  
1 S.Prem   (2009-08-14 10:39 AM) [Entry]
Very nice

Only registered users can add comments.
[ Registration | Login ]
Our poll
How to Say I Love You..?
Total of answers: 248
Comments
200

Copyright lovecity © 2024
Hosted by uCoz